இந்தியாவின் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் ஊர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி. சிவகாசியில் கடந்த சில வருடங்களாக பட்டாசு தொழில் நலிவடையும் நிலையில்., பல்வேறு காரணங்களால் இது தொடர்ந்து நலிவடைந்து வருகிறது.
தகுந்த வேலை வாய்ப்பின்மை மற்றும் பல பிரச்சனைகளால் தொழிலாளர்கள் தவித்து வரும் நிலையில்., இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
தீபாவளி பண்டிகையை தற்போது கொண்டாட உள்ள நிலையில்., அதிக நச்சுத்தன்மை கொண்ட மற்றும் விலை குறைவான சீன பட்டாசுகள் சட்டவிரோதமாக தற்போது இறக்குமதி செய்யப்பட்டு கடத்திக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்த நிலையில்., சீன பட்டாசுகளின் சட்டவிரோத இறக்குமதி மற்றும் விற்பனை கொள்முதல் இவற்றுக்கும் மத்திய அரசு அதிரடியாக தற்போது தடை விதித்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக சுங்கத்துறை கமிஷனர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில்., இந்தியாவில் சீன பட்டாசு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே சீன பட்டாசுகளை கொண்டு சென்றாலோ., அதனை வைத்திருந்தாலும்., அதனை மறைத்து வைத்திருந்து விற்பனை செய்தாலோ., வாங்கினாலும் என எந்த வகையில் கையாண்டாலும் அது சுங்க சட்டம் 1962 -ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசுகளை கடத்திக் கொண்டு வந்து இந்திய சந்தைகளில் விற்பனை செய்வது கடுமையான கவனத்தில் கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் சீன பட்டாசை பயன்படுத்துதல் உடல் நலத்திற்கு தீங்கானது என்று எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது.