2018 ஆம் ஆண்டில் இருந்தே தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டு வருகின்றது. தோனி பேட்டிங்கில் பெரிய அளவில் அப்போது ஜொலிக்கவில்லை. மேலும் தினேஷ் கார்த்திக், ரிஷப்பன்ட் ஆகியோரின் வருகையால் தோனி ஓரங்கட்ட படுவதாக கூறப்பட்டது.
இதற்கு தோனியின் தரப்பிலிருந்து எந்த மாதிரியான பதிலும் கிடைக்கவில்லை. 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா உடனான தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தோனி, தினேஷ் கார்த்திக் என இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக இருந்தனர்.
விஜய் ஷங்கருக்கு காயம் ஏற்பட காரணமாக ரிஷப் பண்ட் அணிக்குள் வரவழைக்கப்பட்டார். உலக கோப்பை முடிந்த பின்னர் தோனி குறித்த பேச்சுகள் மீண்டும் வந்தது. விரைவில் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் அல்லது ஓய்வு பெறுவதற்கான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என கூறப்பட்டது.
இந்நிலையில், இரண்டு மாத விடுப்பில் சென்றார். ராணுவத்தில் பணியாற்றினார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை. தென் ஆப்ரிக்க தொடரில் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிலும் ஏமாற்றத்தை கொடுத்தார்.
பிசிசிஐயின் தலைவராக கங்குலி பதவி ஏற்க இருக்கிறார். கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தோனியின் எதிர்காலம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. இந்திய தேர்வு குழுவினரை சந்தித்து பேசி தோனி நிலை குறித்து தெரிந்து கொள்வேன். அதன்பின்னர் தோனியிடம் பேசுவேன். என கங்குலி கூறியுள்ளார்.
ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்த கோலிஇடம் கங்குலி மற்றும் தோனி குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்வானது, சிறப்பானது. என்னுடைய வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதுவரை அவரை சந்தித்துப் பேசவில்லை. தோனி இங்குதான் இருக்கிறார். ஓய்வு அறையில் தான் இருக்கின்றார். வாருங்கள் என ஒரு ஹலோ சொல்லுங்கள்.” என்று கூறி முடித்துக் கொண்டார்.