வெளிநாட்டவர்களை ருசியால் சுண்டி இழுக்கும் தமிழச்சி!

அவுஸ்திரேலியர்களை தன் ருசியான உணவால் கட்டிப் போட்டுள்ளார் தூத்துக்குடியை சேர்ந்த ஜெயந்தி பாலகிருஷ்ணன்.

பொறியியல் படித்துள்ள ஜெயந்தி பாலகிருஷ்ணனுக்கு, தோசை கடை வைக்க வேண்டும் என்பது ஆசை.

திருமணத்திற்கு முன்பு இதை தன் தந்தையிடம் கூற அவரோ மறுத்துவிட்டார், திருமணத்திற்கு பின் கணவனின் வேலையால் அவுஸ்திரேலியா சென்று குடியேற நேர்ந்தது.

அங்கு தனது கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஜெயந்தி, ஆம் வியாழன் அன்று மார்க்கெட்டில் பலரும் உணவு ஸ்டால்கள் அமைப்பதை பார்த்து தானும் அப்படி தொடங்க முன்பதிவு செய்தார்.

பலரும் காத்திருப்பு பட்டியலில் இருக்க, சில மாதங்களில் ஜெயந்திக்கு வாய்ப்பு வந்துள்ளது.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜெயந்தி வாரந்தோறும் ஸ்டால் அமைத்து சுவையான ருசியான தோசை வகைகளை சமைத்துக் கொடுத்தார்.

இவரது கைப்பக்குவத்துக்கு பலரும் அடிமையாகி போனார்களாம், விரைவில் சிறிய உணவகம் தொடங்குங்கள் என பலரும் அன்புக்கட்டயையும் போடத் தொடங்கினார்களாம்.

பல ஆண்டு முயற்சிக்கு பின்னர் 2008ம் ஆண்டு நியூசவுத்வேல்ஸில் Dosa House என்ற உணவத்தை தொடங்கினார்.

அவுஸ்திரேலியர்கள் மட்டுமின்றி சீனா, மலேசியா என பல வெளிநாட்டவர்களும் தங்களது வாடிக்கையாளர்கள் என நெகிழ்கிறார் ஜெயந்தி.

மாவு அரைப்பது முதல் தோசை சுடுவது வரை அனைத்து வேலைகளையும் தன் கையால் செய்யும் ஜெயந்தி உதவிக்கு மட்டும் பெண் ஒருவரை நியமித்துள்ளார்.