பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் மக்களிடம் சண்டைக்காரி என்ற பெயரை பெற்றவர் வனிதா. நிகழ்ச்சியில் பங்குபெற்றுக் கொண்டிருக்கும் போதே சில போலீஸ் புகார்களால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பின் மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்து டிஆர்பி யையும் ஏற்றினார். மக்கள் பார்வையில் பிக்பாஸ் மூலம் வில்லி போல் தோன்றப்பட்ட இவர் பிரபல சீரியலில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில் வில்லியாக வனிதா நடிக்க இருக்கிறார் என்ற பேச்சுகள் அடிபடுகிறது. எது உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.