கிளிநொச்சியில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் சமீபகாலமாக சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ளதாக பொதுமக்களும் சூழலியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவும் இது மாவட்டத்தை பெரும் பாதிப்புக்கு இட்டுச்செல்லும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

இவ்வாறு இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வில் பிடி படுகின்ற மணல் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற வளாகத்தை நிரப்பி வருகிறது

மாவட்டத்தின் பல இடங்களில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்விற்கு சட்டத்தை நடைமுறை படுத்துகின்றவர்களின் ஒத்துழைப்பு இருப்பதாகவும் ,நீதித்துறையின் மென் போக்கான நடவடிக்கையும் சட்டவிரோத மணல் அகழ்வு செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்ல காரணமாக இருப்பதாக சூழலியலாளர்கள் மேலும் கவலை தெரிவித்துள்ளனர்

பிடிக்கப்படுகின்றன சட்டவிரோத மணலால் நீதிமன்ற வளாகம் நிரம்பி வழிகிறது என்றால் பிடிபடாமல் செல்கின்ற மணலின் அளவு தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளனர்
போலீஸார் நீதித்துறை மற்றும் மாவட்ட நலனில் அக்கறையுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்