கன்னியகுமரி மாவட்டத்தில் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற 11 ஆம் வகுப்பு மாணவனை தடுத்த ஆசிரியையை கத்தியால் சரமாரியாக மாணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள ஆலஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர்மெர்லின் ஷானி(25).
பி.எட் படித்தவரான இவர், தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு, டியூசன் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், மெர்லின் டியூசனில் அப்பகுதியைச் சேர்ந்த ஜெபமணி என்பவரது மகன் ஜெனிஸும் படித்து வருகிறார். ஜெனிஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று ஜெனிஸ் பள்ளிக்கு செல்லாமல் மெர்லின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது பள்ளிக்கு செல்லவில்லையா என மெர்லின் கேட்டுள்ளார். திடீரென மாணவன் ஜெனிஸ், மெர்லினிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மெர்லின் கூச்சலிட்டுள்ளார்.
அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மெர்லினை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து ஜெனிஸ் தப்பியுள்ளார்.
ரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த மெர்லினை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். கத்தியால் சரமாரியாக குத்தியதால் பலத்த காயமடைந்த மெர்லிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் தலைமறைவாக உள்ள மாணவன் ஜெனிஸை தேடி வருகின்றனர்.