சீரியல்களில் இப்போதெல்லாம் சினிமா படம் போல காதலை மையப்படுத்தி நிறைய எடுக்கப்படுகின்றன. இது இளம் வயது ரசிகர்கள், ரசிகைகளை மிகவும் கவர்ந்துள்ளது.
இப்படியான சீரியல்களில் ஒன்றாக திருமணம் நாடக தொடர் இருக்கிறது. இதில் சந்தோஷ், ஜனனி கேரக்டர் மூலம் பிரபலமான ஜோடியானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன். இவர்களுக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்துவிட்டது.
நமது சினிஉலகம் அவர்களை அழைத்து நேர்காணல் நடத்தியது.வழக்கமான நேர்காணல் போல இல்லாமல் தீபாவளி ஸ்பெஷலாக இனிப்பு உணவு சமையல் செய்ய வைத்து அப்படியே பல விசயங்களை கேட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் நவீன் ஜாலியாக கொண்டு சென்றார்.
இதில் அந்த ஜோடி சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள். அப்போது துளு மொழியை தாய்மொழியாக கொண்ட ஜனனி எனக்கு அம்மா இல்லாத நேரத்தில் துணையாக நல்ல நண்பராக சந்தோஷ் இருக்கிறார் என கூறினார்.
அதே போல சந்தோஷ் ஜனனி நல்ல குணங்கள் கொண்டவர், அது மாறாமல் இப்படியே இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் அவர்கள் என்ன பேசினார்கள், என்ன சமைத்தார்கள் என்பதை கீழே இருக்கும் வீடியோவில் பாருங்கள்…