வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்ட நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடர் திட்டமிட்டது போல நடக்கும் என தெரியவந்துள்ளது.
இந்தியா வரும் வங்கதேச அணி 3 டி-20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் திடீரென 11 அம்ச கோரிக்கையை நிறைவேற்றும் வரை எந்த போட்டிகளிலும் பங்கேற்கபோவதில்லை என வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் போராட்டம் அறிவித்து சுமார் 2 நாட்களுக்கு பின் அதை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் நாளை முதல் மீண்டும் அவர்கள் வழக்கம் போல போட்டிகளில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
இதனால் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டது போல நடக்கும் என தெரிகிறது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வங்கதேச கிரிக்கெட் போர்டு தலைவர் நஜ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹசன் கூறுகையில், வங்கதேச கிரிக்கெட் வீரர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அவர்களின் பேச்சுவார்த்தை வருகைக்கு ந் நன்றி தெரிவித்தோம். அவர்களின் பெரும்பாலான கோரிக்கை ஏற்கதக்க வகையில் தான் இருந்தது.
அதில் ஒரு சில கோரிக்கைகளை வங்கதேச கிரிக்கெட் போர்டு செயல்படுத்த முடியாது. அவர்களின் 11 கோரிக்கையில் 9 நிறைவேற்ற முடியும் என்பதை உறுதியாக சொல்ல முடியும் என கூறியுள்ளார்.