வரும் பொதுத்தேர்தலில் எப்படி நின்று விளையாடுகிறேன் என பாருங்கள் என்று விக்கிரவாண்டி மற்றும் நான்குனேரி தொகுதி இடைத்தேர்தல்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கரு த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நான்குனேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வியாழனன்று காலை வெளியாகின.இதில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
நான்குனேரி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஹரி நாடாரை விட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் குறைவாக வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் பொதுத்தேர்தலில் எப்படி நின்று விளையாடுகிறேன் என பாருங்கள் என்று விக்கிரவாண்டி மற்றும் நான்குனேரி தொகுதி இடைத்தேர்தல்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் வியாழன் இரவு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
இரண்டு பணக்கார கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கொள்கை கட்சிகள் அல்ல; கோடி கட்சிகள்
வரும் பொதுத்தேர்தலில் எப்படி நின்று விளையாடுகிறேன் என பாருங்கள்
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெம்பில் இருப்பதால் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவார்கள்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.