கடந்த காலத்தில் முஸ்லீம்கள் பல இன்னல்களை அனுபவித்தனர். இதன் போது என்றோ ஒரு நாள் முஸ்லிம் மக்கள் பற்றி சஜித் பிரேமதாச எதாவது ஒரு வார்த்தை பாராளுமன்றன்றில் பேசினாரா ? அப்படி அவர் பேசினால் நான் இந்த தேர்தலிலிருந்து விளக்குவேன் என மேல் மாகாண ஆளுநர் முஸம்மில் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை பிராந்திய முக்கியஸ்தர் அஹமட் புர்கான் தலைமையில் மக்கள் சந்திப்பொன்றும் வியாழக்கிழமை(24) மதியம் கல்முனை கிரீன் பீல்ட் தொடர்மாடி குடியிருப்பில் இடம் பெற்றது.
இதில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,
எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஜனாதிபதி தேர்தலொன்று இடம்பெறவுள்ளது.இது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கும் விசேடமாக முஸ்லிம் மக்களுக்கு மிக முக்கியம் வாய்ந்த தேர்தலாகவே நான் கருதுகிறேன்.
பிரதானமாக சஜித் பிரமதாச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் வேட்ப்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்த இரண்டு பேரில் யார் இந்த நாட்டை சரியாக கொண்டு செல்லக்கூடியவரை நாம் தெரிவு செய்ய வேண்டும்.
முஸ்லீம்கள் கடந்த காலத்தில் பல இன்னல்களை அனுபவத்தனர் .இதன் போது என்றோ ஒரு நாள் முஸ்லிம் மக்கள் பற்றி சஜித் எதாவது ஒரு வார்த்தை பாராளுமன்றன்றில் பேசினாரா? அப்படி அவர் பேசினால் நான் இந்த தேர்தல் இருந்து நான் வாபஸ் பெறுவேன்.
வட கிழக்கில் அபிவிருத்தியை செய்தது கடந்த ஆட்சியிலாகும் முஸ்லிங்களை வடக்கில் மீள்குடியேற்றம் செய்தது முன்னாள் ஆட்சியாளர்களே. தற்போது கல்முனை சுனாமியால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி மக்களின் ஓர் நீர்மானி வாசிப்பு இன்றி சிரமப்படுவது முடிவிற்கு கொண்டுவரப்படும்.
இந்த நாட்டில் இனவாதம் வர காரணம் சம்பிக்க ரணவக்க என்பவராவார். அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி கூட்டத்தில் முஸ்லிம் அமைச்சர் யாருக்கும் பேசக்கொடுக்கவில்லை ஏன்? என்பது தற்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
ஆனால் பொதுஜன பெரமுனவின் அனுராதபுர கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் பேசினார்.இதில் விளங்கிக்கொள்வது என்ன என்பது மக்களுக்கு தெரியும் என கூறினார்.
இந்த நிகழ்வின் போது கல்முனை கிரீன் பீல்ட் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அஹமட் புர்கான் கருத்து தெரிவித்ததுடன் மக்களது பிரச்சினைகளை மேல் மாகாண ஆளுனர் முஸம்மில் அஸ்-செய்யத் மசூர் மௌலானா முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள் சென்று பார்வையிட்டனர்.