இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண்கள் என்னதான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தாலும்., பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல போராட்டங்களுக்கு மத்தியில் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியை சார்ந்தவர் இந்துமதி (வயது 29). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில்., இவர் அலுவலக பணியின் காரணங்க சென்னைக்கு வருகை தர முடிவு செய்துள்ளார்.
இவரின் திட்டப்படி கடந்த 22 ஆம் தேதியன்று சென்னைக்கு வந்த இந்துமதி., சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து இவர் நேற்று முன்தினம் இரவில் மது அருந்தியுள்ளார்.
மதுஅருந்திவிட்டு தனது அறையில் இவர் இருந்த நிலையில்., விடுதி ஊழியரிடம் அறையில் உள்ள சில பணிகளை செய்ய சொல்லி கூறியுள்ளார். விடுதி ஊழியரும் பணியை முடித்துவிட்டு ஜன்னல் மற்றும் கதவுகளை அடைப்பது போல நடித்துள்ளான்.
பின்னர் கட்டிலில் இருந்த இந்துமதியை கட்டிலில் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான். இதனையடுத்து பெண் அலறியது கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்து அறையினர்., இந்துமதியை மீட்டனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.