பிகிலை தூக்கி அடிக்கும் கைதி..??

தீபாவளியை முன்னிட்டு பல்வேறு படங்கள் வெளியாகி இருக்கின்றது. எனவே இன்று வெளியாகியுள்ள கார்த்தியின் கைது படம் குறித்து ட்விட்டரில் பலரும் பாராட்டி பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் கைதி என்ற திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. மாநகரம் படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் என்பவரின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த படம் தான் கைதி.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். தமிழில் இது அவரது முதல் படமாகும். ட்ரீம் வரியஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றது.

முழுக்க இரவிலேயே ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்த படமாக எடுக்கப்பட்ட தான் கைதி. வெளியான டீஸரிலேயே இது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி இருந்தது. இந்நிலையில், திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் இந்த படம் குறித்து பலரும் ட்வீட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.