இந்த உலகில் யாரும் பணக்காரர்களும் கிடையாது… யாரும் ஏழையும் கிடையாது… அவரவரின் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளை பொறுத்து அவர்களின் எண்ணத்தில் அவர்கள் பணக்காரர்கள் தான்…
சீனாவில் உள்ள பகுதியில் வசித்து வரும் நபரின் பெயர் எரிக் ஷி (வயது 24). இவரது தந்தை “சினோ பையோபார்மாகியூடிகல்” என்ற நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில்., எரிக்கின் பிறந்தநாளிற்கு பரிசளிக்க முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து தனது நிறுவனத்தின் 2.7 பில்லியன் பங்கை தனது மகனின் பெயருக்கு மாற்றி மிகப்பெரிய பரிசளித்துள்ளார். இந்த தொகையின் இந்திய மதிப்பு ரூ.27 ஆயிரம் கோடி ஆகும்.
இந்த பரிசை பெற்ற மகன் ஆனந்தத்தில் திளைத்து வருவதாகவும்., எரிக்கின் தந்தை நடத்தி வரும் நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் சீனா மற்றும் தாய்லாந்து போன்ற பல நாடுகளில் இருப்பதாகவும் தெரியவருகிறது.