ஷ்ரேயாவின் லிப்லாக்… சர்ப்ரைஸ்.!

ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்த ஸ்ரேயா ரஷ்யாவைச் சேர்ந்த ரெஸ்டாரண்ட் ஓனரை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர் பெருமளவில் தன்னுடைய கணவருடன் வெளியில் வரும் போட்டோக்கள் போன்றவற்றை வெளியிடுவது இல்லை.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு மும்பையில் இருவரும் சேர்ந்து வந்து மீடியாக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். பாலிவுட் பிரபலமான ரமேஷ் தன் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள., ஸ்ரேயா மற்றும் அவரது கணவர் இருவரும் வெள்ளை நிற உடையில் வந்திருந்தனர்.

சிறிது நேரம் புகைப்பட கலைஞர்களுக்காக போஸ் கொடுத்த செய்ய அங்கிருந்து செல்லும் முன் தன்னுடைய கணவருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தவர், இந்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவானது வைரலாகி வருகிறது. 37 வயதான போதும் ஸ்ரேயா இன்னமும் ஸ்லிம்மாக இளமையுடன் ஜொலிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.