நடிகை ரோஜா அரசியலில் தற்போது வாங்கும் சம்பளம் எத்தனை லட்சம் தெரியுமா?

நடிகை ரோஜா முதன்முதலில் இயக்குநர் ஆர்.கே.செல்வ மணியின் செம்பருத்தி படத்தில்தான் நடிகையாக அறிமுகமானார்.

இவருக்கு ரோஜா என்கிற பெயரை சூட்டியதும் இயக்குநர் இமயம் பாரதி ராஜாதான். அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார்.

100 படங்களில் நாயகியாக நடித்த பெருமைக்குரியவர் ரோஜா. அடுத்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு இரத்தின கம்பளம் விரித்தது.

அப்படியே ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். பிறகு செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்தார். இவர்களது காதல் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட பெரும் கதையாகும்.

13 ஆண்டுகள் ஆசையாக காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

ராஜமுந்திரியில் ஒரு படப்பிடிப்பில் ரோஜா இருக்கும் போது இயக்குநர் ஆர்.கே.செல்வ மணி ரோஜாவை மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார்.

இது மட்டும் இல்லை, ஜோஜாவிடம் நீங்கள் இப்போது பிசியான ஆர்ட்டிஸ்ட். உங்கள் ஆசை தீர நடியுங்கள். எப்போது போதும் என்று தோன்றுகிறதோ, அப்போது நாம் திருமணம் செய்து கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடடா! எப்படிப்பட்ட மனிதர் இவர்!’ என்று நினைத்து ரோஜாவும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். ரோஜாவுக்காக சுமார் 13 வருடம் இயக்குநர் ஆர்.கே.செல்வ காத்திருந்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு ரோஜாவும் நடிப்பதை விடுத்து தீவிர அரசியலில் களமிறங்கினார்.

திடீரென ஆந்திர அரசியல் களத்தில் குதித்தார். ஆரம்பத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். இக்கட்சியில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

பின்னர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நடிகை ரோஜாவுக்கு ஆந்திர மாநில தொழில் துறை உள்கட்டமைப்பு கழக தலைவர் பதவியை வழங்கினார்.

அவை அமைச்சருக்கு நிகரான பதவியாகும். அதுமட்டுமின்றி மாதம் செலவு உட்பட அனைத்தையும் சோர்த்து 3.82 லட்சம் சம்பளம் தற்போது கிடைக்கின்றதாம்.

இதேவேளை, நடிகை ரோஜா தையொட்டி நகரி தொகுதியில் உணவகம் ஒன்றை ஆரம்பித்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு சாப்பாடு ரூ.4 -க்கு வழங்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.