பிரபல டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘கண்மணி’ சீரியல் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்று வருகிறது.
இந்த கண்மணி சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் லீஷா எக்லர்ஸ் என்பவர் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகின்றது.
நடிகை லீஷா எக்லர்ஸ் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு இருந்தாலும் இவர் 1993ம் ஆண்டு சென்னையில் தான் பிறந்தார்.
அதுமட்டுமில்லாமல் இவர் சென்னையிலுள்ள எத்திராஜ் கல்லூரியில் தன்னுடைய படிப்பை படித்து முடித்தார்.
எல்லாரும் படித்து முடித்து செய்வதுபோல லீஷாவும் மாடலிங் செய்ய தொடங்கினார். லீஷா மாடலிங் செய்ய தொடங்கியவுடன் சினிமா துறையில் இருந்து பட வாய்ப்புகள் நிறைய வந்தன.
ஆனால், அவர் முதலில் படத்தில் நடிக்க விருப்பமில்லை என கூறியிருந்தார். பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
லீஷா எக்லர்ஸ் அவர்கள் எம்.சசிகுமார் தயாரிப்பில்,பி.சோலை பிரகாஷ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பலே வெள்ளைய தேவா’என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
மேலும், இவர் இந்த படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பொது நலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியா, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இப்படி திரைப்படங்களில் இவ்வளவு படம் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை என்ற சோகம் ஒரு பக்கம் இருந்தாலும், சின்னத்திரையில் ஒளிபரப்பான ஒரே தொடரில் இந்த அளவிற்கு ஹிட் ஆகிவிட்டார்.
மேலும், இவர் திரைப் படங்களில் தொடர்ச்சியாக நடித்துக்கொண்டு வந்திருந்தாலும் சீரியலில் சஞ்சீவ் ஜோடியாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
அதோடு இவர் இந்த வருடம் நடித்துள்ள ஒரு சில படங்கள் கூடிய விரைவில் வெளிவர உள்ளது என்ற தகவலும் வந்துள்ளது. இந்த தகவல் வைரலானதும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இவர் இவ்வளவு படங்கள் நடித்துள்ளாரா என்று.