சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் அறிமுகமாகிய வாணி போஜன்.தற்போது வைபவ் நடிக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதையடுத்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு Meeku Maathrame Cheptha என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். Pelli Choopulu படத்தின் இயக்குநர் தருண் பாஸ்க்கர் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஷமீர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படம் வரும் நவம்பர் 1ஆம் திகதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனல் காணொளி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.