மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகவுள்ள ‘துப்பறிவாளன் 2’ திரைப்படத்திற்கு புதிய கதாநாயகி தேர்வாகியுள்ளார்.
இப்படத்தின் கதாநாயகியாக மதுராவைச் சேர்ந்த லவ்லி சிங் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
கடந்த 2017 இல் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி நடை போட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் மீண்டும் உருவாகவுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 இத்திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.
துப்பறிவாளன் படத்தில் நடித்த பிரசன்னாவும் இதில் நடிக்கவுள்ளார்.