சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இப்படத்தின் டிரெய்லர் தீபாவளி தினமான நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நவம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தி சண்டை படத்திற்கு பிறகு விஷாலுடன் மீண்டும் இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை தமன்னா. ஹிப் ஹொப் தமிழா ஆதி இசையமைப்பில் பாடல்கள் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் விஷால், இராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கி, தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெற்று, சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
விஷால், தமன்னா, கபீர் சிங், ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, சாயாசிங், ராம்கி, பழகருப்பையா உள்பட பலர் நடிப்பில், டட்லி ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்துள்ளார்.