விஜய் ரசிகர்கள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூவின் கருத்தால் பரபரப்பு

கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ”விஜய், அஜித், ரஜினி என எந்த நடிகரின் ரசிகர்களாக இருந்தாலும் இப்படி அட்டகாசத்தில் ஈடுபடுகின்றார்கள்” என்று கூறினார்.

பிகில் படத்தின் சிறப்புக்காட்சிக்கு நேற்றிரவு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திரையரங்கில் பிகில் படத்தின் சிறப்புக் காட்சி ஒளிபரப்பவில்லை என விஜய் ரசிகர்கள் நள்ளிரவில் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.