தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் சில மாதங்களுக்கு முன்பு ரிலிஸானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
இப்படம் சுமார் ரூ 31 லட்சம் வரை முதல் நாள் திருச்சியில் வசூல் செய்தது, இதை தொடர்ந்து இந்த சாதனையை பிகில் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், பிகில் ரூ 26 லட்சம் வரை தான் திருச்சியில் வசூல் செய்துள்ளதாம், மேலும், பிகிலோடு கைதி படமும் திரைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் தான் பிகில் வசூல் குறைந்திருக்கும் என்று கூறப்படுகின்றது, வரும் நாட்களின் வசூல் எப்படியிருக்கும் என்பதை பார்ப்போம்.
அதோடு திருச்சியில் சில முக்கியமான சிங்கிள் தியேட்டர்களை கைதி படம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. கைதி திருச்சியில் முதல் நாள் ரூ 11 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.