இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகாரில் இருக்கும் ஜீவன்கார் பகுதியில் வசித்து வரும் நபரின் பெயர் பைசாத் (வயது 20). இவர் இதே பகுதியை சார்ந்த இளம்பெண்ணொருவரை கடந்த ஆறு மாதங்களாக நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார்.
இவர்களின் பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதமாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில்., கடந்த மாதத்தில் இருந்து பெண்ணை சந்தித்தல் மற்றும் பேசுதல் போன்ற செய்லபாடுகளில் இருந்து விலக்கம் அளித்துள்ளார்.
இந்த தருணத்தில்., திடீரென அங்குள்ள பண்டிட் தீன் தயாள் மருத்துவமனையில் ஆசிட் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மருத்துவமனையில் இவர் அனுமதி செய்யப்படும் சமயத்தில் கண்கள் பாதிப்படைந்து உள்ளது. இதனையடுத்து இது குறித்த தகவல் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு., சிகிச்சை துவங்கப்பட்டது.
இது குறித்து பைசாத்தின் தாயார் கூறுகையில்., பைசாத்தின் காதலி தனது மகனை அலைபேசியில் தொடர்ந்து அழைத்து வந்துள்ளார். எனது மகன் அலைபேசியில் பேச மறுப்பு தெரிவித்து வந்த நிலையில்., சம்பவத்தன்று எனது மகனிடம் காலையில் பேசியுள்ளார்.
இந்த சமயத்தில்., பெண் எனது மகனை திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்திய தருணத்தில்., எனது மகன் இதற்கு ஒத்துழைக்காததால்., எனது மகனின் மீது ஆசிட்டை வீசியுள்ளார் என்று கூறியுள்ளார். இதனை அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண்ணை கைது செய்தனர். இது குறித்து பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.