இந்திய குழந்தைகள் ஆணையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!!

இந்தியா முழுவதும் பயன்படு இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூட அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசியக் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து, தேசியக் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித் விழுந்தது மிகவும் வருத்தமளிக்கிறது என அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் இந்தியா முழுவதும் அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்புக்கு அனைத்து தரப்பினரும் அதிக முக்கியத்துவம்  அளிக்க வேண்டும் என்றும், பயன்பாடுகள் இல்லாத அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தேசியக் குழந்தைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.