ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபு பக்கர் அல் பக்தாதி நாயைப் போல இறந்து போனதாகவும் அவன் ஒரு கோழையைப் போலவே கண்ணீர்விட்டபடி உயிரிழந்தாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அல்பக்தாதியால் மனித குலத்திற்கு இனி எந்த வித அச்சுறுத்தலும் இருக்காது என்று கூறியுள்ளார்.
சிரியாவில் ஐ.எஸ். இயக்கம் அங்கு ஆட்சியில் இருக்கும் ஆளும் அரசுக்கு எதிராக தீவிரவாத வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறது. ஒசாமா பின்லேடனுக்கு பிறகு மிகப் பெரிய தீவிரவாத இயக்கத் தலைவனாக இருந்தவன் அபு பக்கர் அல் பக்தாதி இவன் தொடருந்து கொடூரமான வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வந்தான்.
அபு பக்கர் அல் பக்தாதி நடத்திய குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாத தாக்குதல்களில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமானோர் உயிரிழக்க காரணமாக இருந்தவன் அபு பக்கர் அல் பக்தாதி. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ். இயக்கத்தின் தலைவனாக செயல்பட்டு வந்தான். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தான்.
இந்நிலையில், நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் வெளியிட்ட பதிவு ஒன்றில் மிகப்பெரிய விஷயம் நடந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அதில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் பக்தாதி ஒருநாயைப் போல் கொல்லப்பட்டான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சிரியா நாட்டில் உள்ள பரிஷா பகுதியில் அவன் மறைந்திருந்த வீட்டை சுற்றிவளைத்த அமெரிக்க கூட்டுப் படைகள் குண்டுகளை வீசிய போது உயிருக்கு அஞ்சி கதறி அழுத பக்தாதி ஒரு கோழையைப் போல அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்ததாகவும் சுரங்கம் வழியாக தப்ப முயற்சித்ததாகவும் ஆனால் அவனால் தப்பி ஓட முடியவில்லை.
இதையடுத்து, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்த ஐ.எஸ் இயக்கத் தலைவன் அபு பக்கர் அல் பக்தாதி தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொண்டதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அபு பக்கர் அல் பக்தாதி இறப்பின் மூலமாக உலகம் தற்போது பாதுகாப்பான இடமாகி விட்டது என்றும் பக்தாதியால் இனி எந்த ஒரு மனித உயிருக்கும் அச்சுறுத்தல் இல்லை என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.