ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணியை பார்வையிட்ட துணை முதல்வர்..!!

பயன்பாடத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

இதையடுத்து, சுஜித்தை மீட்கும் பணிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நேற்று காலையில் இருந்து ரிக் இயந்திரத்தின் மூலம்  ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதையடுத்து சம்பவ இடத்துக்கு நள்ளிரவில் விரைந்த துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இரண்டாவது ரிக் இயந்திரம் குழிதோண்டும் பணிகளை பார்வையிட்டார்.

இதையடுத்து, குழந்தை சுஜித்தின் பெற்றோரை நேரில் சந்தித்த அவர் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகம் முழுவதும் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.