திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள் தங்களுக்குள்ளான எதிர்பாலின ஈர்ப்பு மற்றும் தாம்பத்திய உணர்வுகளால் தங்களால் இயன்றவரை தாம்பத்தியத்தை அடிக்கடி மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., துணையின் விருப்பமே தன் விருப்பம் என்று கருதும் பெண் துணையும் தாம்பத்தியத்திற்கு சம்மதம் வழங்கி., தேனிலவு தாம்பத்தியங்களிலும் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
இவ்வாறான நிலையில்., சில தம்பதிகள் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் தங்களின் துணையிடம் இருந்து தாம்பத்தியம் மற்றும் அன்பான முத்தங்கள் போன்றவற்றில் இருந்து விலக்கம் அடைகின்றனர். திருமணம் முடிந்த புதிதில் இருந்த தாம்பத்திய ஆசை மற்றும் உணர்வானது பெண் துணைக்கு அதிகளவு எதிர்பார்ப்புடன் இருக்கும் பட்சத்தில்., ஆண் விளக்கம் அடைவது பெரும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து நாம் காண்போம்..
தாம்பத்தியத்தின் துவக்கத்தில் அதிகளவு ஆர்வத்தில் ஈடுபடும் நபர்கள்., பின்னர் அதன் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். இந்த பிரச்சனை சிலருக்கு உடல் ரீதியாகவும்., சிலருக்கு மன ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனையால் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை ஆங்கிலத்தில் “Sexual burnout condition” என்று கூறுவார்கள். பொதுவாக நாம் ஆர்வமாக செய்லபடும் ஓர் விஷயத்தில்., நீண்ட நாட்களுக்கு பின்னர் சலிப்பு ஏற்படுவதை “Emotional fatique” என்று கூறுவார்கள்.
தாம்பத்திய உணர்வு மற்றும் தாம்பத்திய செயல்பாடுகள் பொதுவாக இப்போதுள்ள நிலையில் உடல் கவர்ச்சியை மையப்படுத்தி காண்பிக்கப்பட்டு., நம்மால் புரிந்துகொள்ளப்பட்டு வருவதால்., தாம்பத்தியத்தில் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆர்வம் குறைந்து., இதன் விளைவாக மனைவியின் மீதான இயல்பான அன்பும் குறைகிறது. மேலும்., மனைவி சிறியளவில் தவறுகள் செய்தாலும்., பெரியளவில் பிரச்சனையாகி சண்டைகள் நடக்கும். இதுமட்டுமல்லாது மனைவியிடம் இருந்து தன்னைத்தானே விலக்கி கொள்வார்.
இந்த பிரச்சினையை சமாளிப்பதற்கு ஆண்கள் விஷயத்தை அறிந்து கொண்டு., அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும். தாம்பத்தியத்திற்கும் – அடுத்த தாம்பத்தியத்திற்கும் தேவையான இடைவெளியை கொடுக்க வேண்டும். தாம்பத்தியத்தை தவிர்த்து மனைவியுடன் சந்தோசமாக இருக்க பல விஷயங்கள் உள்ளது. உங்களின் மனநிலை கட்டுக்குள் அமைதியாக இருக்க வேண்டும். சில நாட்கள் மனஅமைதியுடன் இருந்தாலே., தாம்பத்திய உணர்வு மீண்டும் இயற்கையாகவே அதிகரிக்கும்.
கணவனின் சரிபாதியான மனைவி – மனைவியின் சரிபாதியான கணவன் இருவரும் தங்களின் துணைக்கு இதனைப்போன்ற பிரச்சனை இருப்பதாக உணர்ந்தால்., எந்த விதமான கட்டாயத்திற்கும் உள்ளாக்காமல்., நான் இருக்கிறேன் என்று ஆறுதலாக கூறி பிற இன்பத்தில் கவனத்தை செலுத்துங்கள்.. இந்த ஆறுதல் தாம்பத்திய வாழ்க்கையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் என்பதை உணர்த்துங்கள்… அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல சிந்தித்து செயல்படுங்கள்… தாம்பத்தியம் உடல் இசைக்கும் – தேவைக்கும் மட்டுமானதல்ல… மனத்தின் தேவையும் – ஏக்கமும் கூட தான்…..