அஜித் நடிப்பில் இவ்வருடம் வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரு படங்களுமே பெரும் வரவேற்பை பெற்று மக்களால் மிகவும் பாராட்டப்பட்டது.
இப்படத்திற்கு நல்ல வசூல் கலெக்ஷனும் கிடைத்தது. அஜித் அடுத்ததாக மீண்டும் போனி கபூர் தயாரிப்பிலும், வினோத் இயக்கத்திலும் இணைந்துள்ளார்.
இப்படத்தின் படபூஜை அண்மையில் போடப்பட்டு வலிமை என பெயர் வைக்கப்பட்டது. இப்படத்திற்காக அவர் அண்மையில் தன் முடியின் நிறத்தை கருமையாக மாற்றிக்கொண்டதை புகைப்படத்தின் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே.
இந்நிலையில் அவர் இப்படத்தின் ஒரு நல்ல நகைச்சுவை நிரம்பிய ரோலில் நடிப்பதாக தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.