கைதி கார்த்தி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம். அனைவரும் எதிர்ப்பார்த்தது போலவே படமும் செம்ம ஹிட் அடித்துள்ளது.
இப்படம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வருகிறது. அதிலும் நேற்று முதல் நாளை விட வசூல் அதிகம் தான்.
ஆம் மூன்று நாள் முடிவில் இப்படம் ரூ 10 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 30 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.