அரபு நாட்டை அதிர வைத்த பிகில் வசூல்..!!

தளபதி விஜய் நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த படம் பிகில். இப்படம் எதிர்ப்பார்த்தது போலவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் வெளிநாட்டில் வசூல் சாதனை செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக அரபு நாட்டில் இப்படம் ரூ 15 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

கண்டிப்பாக இப்படம் ரூ 20 கோடி வரை அங்கு வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விஜய்யின் சர்கார் மொத்தம் ரூ 16 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.