தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் அனைவரும் அறிந்த ஒரு தனியார் தொலைக்காட்சி என்றால் அது விஜய் தொலைக்காட்சி என்றுதான் கூற வேண்டும். ஏனெனில்., இந்த தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை மூன்று சீசனிலும் பெற்றுள்ளது.
பிக் பாஸ் சீசன் 3 தற்போது மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த சீசனும் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக முடிவடைந்த நிலையில்., மக்களும் இதற்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
மேலும்., பிக்பாஸ் முதல் மற்றும் இரண்டாம் சீசனில் இருந்த மாதிரியே நட்பு., காதல்., மோதல் மற்றும் உறவு என அனைத்தையும் வெளிப்படுத்தி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்று ரசிகர்களையும் தக்கவைத்து பெரும் சாதனை படைத்தது.
பிக்பாஸ் முதல் மற்றும் இரண்டாம் சீசனை போலவே மூன்றாவது சீசனும் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வெற்றி பெற்றது. இந்த சீசனின் முடிவில் மலேசிய நாட்டை சேர்ந்த முகைன் என்ற போட்டியாளர் வெற்றி பெற்றார்.
Happy diwali to my family?? #Diwali #SakshiAgarwal @proyuvraaj pic.twitter.com/69UZANnkaF
— Sakshi Agarwal (@ssakshiagarwal) October 26, 2019
இதில் கலந்து கொண்ட நடன இயக்குனர் சாண்டி இரண்டாவது இடத்தை தக்கவைக்க நிலையில்., இலங்கையைச் சார்ந்த லாஸ்லியா மூன்றாவது இடத்தையும்., இந்தியாவை சார்ந்த ஷெரின் நான்காவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார்.
பிக் பாஸ் இல்லத்தில் இருந்த போட்டியாளர்கள் பிக் பாஸ் இல்லத்தில் இருந்த சம்யத்தில் அதிகளவு மக்களால் கவனிக்கப்பட்டு போலவே., அவர்கள் வெளியே சென்ற பின்னரும் கவனிக்கப்பட்டு கொண்டு இருப்பார்கள். அந்த வகையில்., சாக் ஷி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.