பிக்பாஸ் சேரன் வெளியிட்ட உருக்கமான பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் ஒழுக்கமான நபர் என டைட்டில் கொடுக்கப்பட்டவர் இயக்குனர் சேரன். அவருக்கு லாஸ்லியா மீது அவ்வளவு அன்பும், பாசமும் இருந்தது.

அனைவரும் ஓரு நல்ல சீனியர் போல குரல் வழிகாட்டி வந்தார். யாருமே செல்லாத நிலையில் பிக்பாஸ் மதுமிதாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

அண்மையில் சமூகவலைத்தளத்தில் யாரும் யாரை தரம் தாழ்த்தி பேச வேண்டாம் என கேட்டுகொண்டார். இந்நிலையில் ஒட்டு மொத்த தமிழகமும் துடித்துக்கொண்டிருக்கும் சம்பவமான சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் குறித்து அவர் உருக்கமான பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் சிறுவனை மீட்கும் முயற்சியில் 51 மணி நேரமாக தொடர்ந்து செயல்படும் அமைச்சர், அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து முயற்சியாளர்களையும் பாராட்டுவோம்.

இவர்களின் நம்பிக்கையும் அனைத்து மக்களின் ப்ரார்த்தனையும் சிறுவனை மீட்கும் என கூறியுள்ளார்.