விசேட அதிரடிப்படையினாின் சீருடையை அணிந்து கொண்டு நபா் ஒருவரை கடத்தி கொள்ளையிட முயற்சித்த 6 போ் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சீருடையை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட முயற்சித்தமை மற்றும் கடத்தலை திட்டமிட்டமை ஆகிய குற்றச்சாட்டிகளின் கீழ், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.