திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன்.
இவர் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த போர்வெல்லில் விழுந்தார்.
அவரை கடந்த 4 தினங்களாக மீட்கும் பணியில் மீட்பு படையினரும் தீயணைப்பு வீரர்களும் போராடி வருகின்றனர். எனினும் அவரை இன்னும் மீட்கமுடியவில்லை.
நேற்று முன்தினம் வரை குழந்தையின் உடலில் அசைவுகள் இருந்தன. நேற்று அவரது உடலில் அசைவுகள் ஏதும் இல்லை.
இதனால் அங்கு பரபரப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் சுஜித்தை மீட்கும் பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது ஆழ்துளை கிணறு உள்ள குழந்தை மீட்பது தான் தனது கடமையாகக் கருதி கண் துஞ்சாது மூன்று நாட்களாக இரவு பகலாக அருகில் இருந்து அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை தந்து குழந்தை சுர்ஜித் மீட்கும் பணியில் தன் பிள்ளைகளைப் போல் காத்து வரும் அமைச்சர் அவர்கள் என்பது யாவரும் அறிந்த விடயம்.
அத்தடன் அமைச்சர்களான வெல்லம்மணி நடராஜன் மற்றும் பிற்படுத்தல் துறை அமைச்சரும் – அமைச்சர் விஜயபாஸ்கரிற்கு துணையாக உள்ளனர்.
ஆனால் இங்கு ஒரு பெரும் தவறு அ.தி.மு.க அமைச்சர்கள் அற்றும் அரசியல் பிரமுவர்களை தவிர வேறு யாரையும் ஊடகங்கள் சரிவர வெளிக்காட்ட வில்லை என்பதுடன் நேரலையில் உச்சரிக்கும் போதும் பெயர்களைக் கூட உச்சரிக்காமை சமூக ஆர்வலர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சராக இருப்பதால் விஜயபாஸ்கரை மட்டுமே பணி செய்வதை போல காட்டும் மீடியா.
சம்பவ தினம் முதல் இன்று வரை களத்தில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களை காண்பிக்க மறந்ததா அல்லது வேண்டும் என்று மறப்பிக்கப் பட்டாரா என்பதுவே இன்றைய வினா…
இவ் இடத்தில் தான் மௌனமாக அரசியல் தொடங்குகிறது இங்கு அரசியல் பேசுவது நல்லதல்ல ஆனால் வருகை தரும் முக்கியஸ்தர்களை சரியாக வெளிக்காட்ட வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றனர்.