தீபாவளியும் அதுவுமா நடிகை போட்ட அந்த வீடியோ.. காரித்துப்பாத குறையாக திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

நடிகை ஷாலு ஷம்மு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். நடிகை ஷாலு ஷம்மு, தசாவதாரம் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து காஞ்சிவரம், கண்டேன் காதலை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஷாலு ஷம்மு. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

அதே நேரத்தில் அவ்வப்போது கவர்ச்சி வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். பிகினியில் நீச்சல் குளத்தில் குளித்தப்படி இவர் வெளியிட்ட வீடியோ வைரலானது.

அதனை தொடர்ந்து பப்புகளில் ஆண் நண்பர்களுடம் டான்ஸ் ஆடும் வீடியோவையும் போட்டு உசுப்பேற்றி வருகிறார். அறைகுறை ஆடையில் அவர் ஆடும் கவர்ச்சி ஆட்டம் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது.

சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் ஷாலு ஷம்மு, நிஜ வாழ்க்கையில் மார்டன் பெண்ணாக ரகளை செய்து வருகிறார். இந்நிலையில் ஷாலு ஷம்மு தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பப்பில் ஆண் நண்பருடன் போட்ட கெட்ட ஆட்டத்தை பதிவேற்றியிருக்கிறார்.

சிவப்பு நிறத்தில் தொடைக்கு மேல் தெரியும் டாப்ஸை அணிந்து, வளைந்து நெளிந்து படுகவர்ச்சியாக ஆடியிருக்கிறார். அதனை பார்த்த நெட்டிசன்கள், தீபாவளியும் அதுவுமா இது என்ன கன்றாவி என திட்டி தீர்த்து வருகின்றனர்.

இருக்க வேதனையில.. அவன் அவன் இருக்க வேதனையில..என்ன கருமம் இது..ச்சை.. என கோபமாக கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஷாலுவின் செக்ஸி டான்ஸை பார்த்த இந்த நெட்டிசன், என்ன கருமம்டா இது என கேட்டுள்ளார்.

Read more at: https://tamil.filmibeat.com/heroines/netizens-slams-actress-shalu-shammu-after-seeing-her-sexy-dance-pub/articlecontent-pf112830-064423.html