உயிருக்கு போராடி இறந்த சுஜித்.. கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் நடிகை மீரா மிதுன்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை காப்பாற்ற நான்கு நாட்களாக நடந்த முயற்சிகள் வீணானதால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் தற்போது அழுகிய நிலையில் போர்வெல்லில் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுஜித் மரணம் பற்றி நடிகை மீரா மிதுன் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘அந்த குழந்தை இவ்ளோ நாள் உயிருக்கு போராடி இறந்திருக்கு. இனிமேல் இன்னொரு குழந்தைக்கு இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வது தமிழக அரசின் பொறுப்பு’ என மீரா மிதுன் கூறியுள்ளார்.