ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த குழந்தை சுர்ஜித்தின் உடல் 80 மணித்தியாலங்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மணப்பாறை பாத்திமாபுதூர் கல்லறையில் காலை சுமார் 8.25 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுர்ஜித்தின் உடலுக்கு நடுக்காட்டுப்பட்டியை அடுத்த பாத்திமாபுதூர் கல்லறையில் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
அவர்களின் அஞ்சலிக்குப் பின்னர் குழந்தையின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது.
தாய் பிரிவை தாங்க முடியாது அவரின் உடல் மீது மயக்கமுற்ற நிலையில் படுத்திருக்கும் காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பின்னர், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மண்ணுக்குள் நிரந்தரமாகத் துயில்கொண்ட குழந்தை சுர்ஜித்துக்கு பொதுமக்கள் கண்ணீர்மல்க விடைகொடுத்தனர்.
குழந்தை சுர்ஜித்தின் உடல்முன்பாக அமர்ந்திருந்த அவரது தாயார் கலாமேரி கதறி அழுதார்.
அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர்.
தாய் பிரிவை தாங்க முடியாது அவரின் உடல் மீது மயக்கமுற்ற நிலையில் படுத்திருக்கும் காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
விடியற்காலை 4.30 மணி அளவில் சிறுவன் சுர்ஜித் உடல் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரதேப் பரிசோதனை நிறைவடைந்த பின் சுர்ஜித் உடல் நல்லடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக கல்லறை தோட்டத்துக்கு கொண்டு வரப்பட்டது.
ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில் குழந்தை சுர்ஜித்தின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை தவறி விழுந்ததை தொடர்ந்து 80 மணித்தியாலங்கள் நடைபெற்ற மீட்பு முயற்சி தோல்வியில் நிறைவடைந்தது.