அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ சம்பவங்கள் காரணமாக மாகாண ஆளுநர் கேவின் நியூசம் (Gavin Newsom) நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:30 மணிக்குப் பிறகு காட்டுத்தீ ஏற்பட்டது. அதன் தீவிரம் தற்போது அதிகரித்திருப்பதை அடுத்து, அங்கு அவசர நிலை பிரகனடப்படுத்தபட்டுள்ளது.
கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அவர்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேறி உள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் நட்சத்திரம் லெப்ரான் ஜேம்ஸ் உட்பட 3,300 வீடுகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் இறங்கி உள்ளனர். காட்டுத் தீயை கூடிய விரைவில் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.