யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் சற்று முன் ஆசிரியை ஒருவரை அதிபர் கடுமையாக எச்சரித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியை மாணவர்களுக்கு முதலாம் பாடம் நடாத்த வகுப்புக்குள் நுழைந்ததில் இருந்து, தமிழ்நாட்டில் குழாய் கிணற்றுக்குள் மரணமான குழந்தை தொடர்பாக மாணவர்களுடன் சேர்ந்து அழுது கொண்டிருந்ததாகத் தெரியவருகின்றது.
ஆசிரியையின் அழுகையால் ஏனைய வகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் அழுகை தொற்றியுள்ளது. இதனை அவதானித்த அதிபர் பல தடவை வகுப்புகளுக்குள் வந்து பாடத்தில் கவனம் செலுத்துமாறும் அழுகையை நிறுத்துமாறும் கேட்டுள்ளார்.
இருந்தும் அந்த ஆசிரியை தொடர்ச்சியாக பாடத்தில் கவனம் செலுத்தாத காரணத்தால் அதிபர் குறித்த ஆசிரியையை சற்று நேரத்துக்கு முன் தனது அலுவலகத்துக்கு அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளாராம்.
இன்று குறித்த பாடசாலையில் ஆராதனை நிகழ்வில் அதிபர் இறந்த அந்தக் குழந்தைக்காக மௌன அஞ்சலியும் செலுத்தியுள்ளார். அத்துடன் கிணறுகள் தொடர்பாக அவதானம் செலுத்துமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.