அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வசூல் செய்து வருகிறது. கொண்டாட்டத்தில் இருந்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைய வைத்த செய்தி விஜய் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் என்பது தான்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது வீட்டில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
இதனால் பரபரப்பான போலிசார் உடனே விஜய்யின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுப்பட்டு வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்தனர்.
இந்நிலையில் விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலிசார் மிரட்டல் விட்ட மர்ம நபரை கைது செய்தனர்.
அவர் சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்தனர்.