வைரலாகி வரும் அல்லு அர்ஜுன் படத்தின் பாடல்

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் அலா வைகுந்தபுரம்லோ படத்தின் பாடல் 24 மணி நேரத்தில் மிக பெரிய சாதனையை படைத்து வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் நடிகராக வலம் வருபவர். தற்போது இவரது நடிப்பில் அலா வைகுந்தபுரம்லோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இருந்து வெளியாகி இருந்த சமாஜவராகமனா என்ற சிங்கிள் டிராக் தெலுங்கு சினிமாவில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்ட பாடல் என்ற சாதனையை படைத்தது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடலாக ராமுலோ ரமுலா என்ற பாடல் 24 மணி நேரத்தில் 8.3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய சினிமாவிலேயே குறுகிய நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.