லோகேஷ் இயக்கத்தில் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பின் விபரம்

நடிகர் விஜய் உருவாகிய ‘பிகில்’ திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் நிலையில் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பும் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 3 ஆம் திகதி ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு பூஜை ஆரம்பமாகி, இதன் படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விறுவிறுப்பான திரில்லர் கதையைக் கொண்டு உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை குறைந்த நாட்களில் படமாக்கி வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

‘தளபதி 64’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்திருப்பதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த படத்தில் ஏற்கனவே மாளவிகா மேனன், சாந்தனு, அந்தோனி வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், தற்போது மேலும் இருவர் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பின்போது இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் இந்த படத்தில் கவர்ச்சியான பேராசிரியரை வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இன்னொருவர் வெப் சீரீஸில் நடித்து வரும் பிரிகிதா என்பவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்திற்காக அனிருத் இரண்டு பாடல்களை பாடி முடித்துவிட்டதாகவும் அவற்றில் ஒரு பாடலின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.