மீண்டும் களமிறங்கும் வடிவேலு..

நடிகர் வடிவேலு ஹீரோவாக நடிக்க துவங்கிய பிறகு படங்களில் காமெடியனாக நடிப்பதை நிறுத்திவிட்டார். அதன்பிறகு புலிகேசி இரண்டாம் பாகம் படம் சர்ச்சையில் சிக்கியதால் அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது.

மெர்சல் படத்திற்கு பிறகு அவர் தற்போது எந்த படங்களிலும் நடிக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை தான் கொடுத்துள்ளது. ஆனால் தற்போது அவர்களுக்கு சந்தோசம் அளிக்கும் செய்தி என்னவென்றால் நடிகர் வடிவேலு அடுத்து கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் காமெடியனாக நடிக்கிறார் என்பது தான்.

இருப்பினும் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.