அட்லீ இயக்கியுள்ள பிகில் படத்தின் நீளம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம். இது மிக நீளம் என்றும் விமர்சனங்களை இந்த படம் சந்தித்து வருகிறது.
இந்த படத்தில் மேலும் பல காட்சிகளை அட்லீ நீக்கியுள்ளார். அப்படி விஜய் ஒரு சீனில் சொல்லும் குட்டி கதையையும் அட்லீ நீக்கிவிட்டாராம். இந்த தகவலை படத்தில் பெண்கள் அணி கேப்டனாக நடித்துள்ள அம்ரிதா அய்யர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“இறுதி போட்டி துவங்கும் முன்பு அனைத்து பெண்களும் மிகவும் பதற்றமாக இருந்தபோது, விஜய் சார் என்னை தனியாக அழைத்து ஊக்கப்படுத்த ஒரு குட்டி கதை சொல்வார். அந்த சீன் படத்தில் இருந்து அட்லீ நீக்கிவிட்டார்” என அம்ரிதா தெரிவித்துள்ளார்.