பெண்களின் அரைநிர்வாண படங்கள் வரைந்த.. அஜித்தின் மச்சினிச்சி!

நடிகை ஷாமிலி வரைந்த ஓவியங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

90 காலகட்டங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை ஷாமிலி. அஞ்சலி, துர்கா, தைப்பூசம், தேவர் வீட்டுப்பொண்ணு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.

பின்னர் 2009இல் வெளியான ஓயே என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் 2016இல் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வீரசிவாஜி படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் மாடலிங், ஓவியம் என பிஸியாக உள்ளார்.

புகழ்பெற்ற ஓவியர் ஏ.வி.இளங்கோவிடம் ஓவிய பயிற்சி பெற்று வரும் ஷாமிலி தான் வரைந்த சில ஓவியங்களை பெங்களூருவில் நடைபெற்று வரும் ஓவியக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளார்.

அரைநிர்வாணமாக இருக்கும் பெண்களின் படங்களை ஓயில் பெயிண்டிங் மூலம் தீட்டியுள்ள இவரின் திறமையைப் பாராட்டி வருகின்றனர்.