அழகில் அம்மாவை உரித்து வைத்திருக்கும் மகள்.!

தமிழ் சினிமாவுக்கு மலையாளத்தில் இருந்து வந்தவர் நடிகை அசின். ஒரு நேரத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர். அஜித், விஜய், சூர்யா என பல பிரபலங்களுடன் நடித்து வந்தார்.

 

பெரும் மார்க்கெட் அவருக்கு இருந்த போதிலும் அவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை தொடர்ந்தார். அதன்  பின்னர் படங்களில் அவர் ஏதும் நடிக்கவில்லை.

 

 

திருமணமான ஒரே ஆண்டில் நடிகை அசினுக்கு ஆரின் என்ற பெண் குழந்தையும பிறந்தது. குழந்தை பிறந்த ஒருவருடம் வரை அசின் தனது செல்ல மகளின் புகைப்படத்தை வெளியிடாமல் பாதுகாத்தார். அதன் பிறகு ஆரின் முதல் பிறந்த நாள் அன்று தான் புகைப்படம் வெளியாகியது.