மிகவும் மோசமான பரவை முனியம்மாவின் உடல்நிலை.. நேரில் சென்று உதவி செய்துள்ள நடிகர்

தூள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. அந்த படத்தில் வரும் ‘சிங்கம் போலெ’ பாடல் அவரை அதிகம் பாப்புலர் ஆக்கியது.

தொடர்ந்து படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அவர் உடல்நிலை அடிக்கடி மோசமானதால் சமீபகாலமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6 லட்சம் ரூபாய் நிதிஉதவி அளித்தார். அதன் மூலம் அவருக்கு மாதம் 6 ஆயிரம் ருபாய் பணம் கிடைக்கிறது. அந்த தொகை சிகிச்சைக்கு போதவில்லை.

இந்நிலையில் பரவை முனியம்மாவின் உடல்நிலை சில வாரங்களாக மோசமாகவே உள்ள நிலையில் பிரபல நடிகர் அபி சரவணன் அவரது வீட்டுக்கு நேரில் சென்று பண உதவி செய்துள்ளார். மேலும் அவரது மருத்துவ செலவையும் ஏற்றுக்கொள்வதாக அபி சரவணன் தெரிவித்துள்ளார்.