பிகில் தீபாவளி வெடி சத்தம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. உலகம் முழுக்க 4000 க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது.
படம் ரிலீஸாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று படம் ரூ 200 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இது குறித்த ஸ்பெஷல் டிவிட்டர் டேக்கும் இடம் பெற்றது.
பல இடங்களில் இன்னும் வசூல் அதிகமாகியுள்ள நிலையில் இது குறித்த வசூல் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
- தமிழ்நாடு – ரூ 90 கோடி
- ஆந்திரா / தெலுங்கானா – ரூ 14.40 கோடி
- கர்நாடகா – ரூ 14.25 கோடி
- கேரளா – ரூ 13.30 கோடி
- வட இந்தியா – ரூ 3.50 கோடி
- இந்தியா முழுக்க – ரூ 135.45 கோடி
- ஓவர் சீஸ் – ரூ 65.95 கோடி
உலகம் முழுக்க – ரூ 201.40 கோடி