ஸ்டாலினுக்கு எதிராக திரும்பிய திருமாவளவன்!

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திமுக கூட்டணி, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு திமுக தான் காரணம் என்று கூட்டணி கட்சியினர் கூறிவருகிறார்.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு சலுகைகள் தருவதாக திமுக அறிவித்தது தான் தோல்விக்கு காரணம் என்றார்.

மேலும், திமுகவின் இந்த அறிவிப்பு வன்னியர் அல்லாத பிற சமூக மக்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்ததாகவும், அதனால் வாக்குகள் கிடைக்காமல் போனது என்று கூறினார். திமுகவின் இந்த அறிவிப்பே அக்கட்சியின் தோல்விக்கு முழுமையான காரணம் என்றும் திருமாவளவன் கூறினார்.