விஜய் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.! ரசிகர்களை அதிர வைத்த இந்திரஜா.!

விஜய் நடிப்பில் அட்லியின் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் பிகில். சென்ற வாரம் வெளிவந்த இந்த படம் தற்போது பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளை குவித்து வருகிறது. இந்த படத்தில் பெண்கள் கால்பந்து விளையாடுவதை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது .

இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து இந்துஜா, வர்ஷா, அமிர்தா, இந்திரஜா போன்ற பல பெண்களும் நடித்திருக்கிறார்கள். இவர்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் வருபவர் ரோபோ சங்கரின் மகம் இந்திரஜா.

இந்த படத்தில் ஒரு காட்சியில் இந்திராஜாவின் தோற்றத்தை வைத்து ‘குண்டம்மா’ என்று அழைப்பது போல காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சியை பலரும் விமர்சித்து வந்தார்கள், விஜய் எப்படி ஒருவரின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்திருக்கிறார் என்று எதிர்ப்புகளும் இணையதளத்தில் விஜய்க்கு எதிராக கிளம்பியது.

இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திரஜா அளித்த பேட்டி ஒன்றில் இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவர்கள் என்னை ‘குண்டம்மா’ என்று சொல்வதற்கு மிகவும் தயக்கப்பட்டார்.

மேலும் இந்த காட்சி படத்திற்கு முக்கியமானது என்பதால் அவர் அதை நடித்தார். அந்த காட்சியில் நடித்து முடித்த பிறகு அவர் என்னிடம் குண்டம்மா என்று சொல்லி நடித்ததற்கு மன்னிப்பு கேட்டார் என்று அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.