போதையில் தள்ளாடிக்கொண்டிருந்த இளம்பெண்.. ஹோட்டல் ரூம்பாய் செய்த செயல்..!

சென்னையில் போதையில் இருந்த இளம்பெண்ணை நட்சத்திர ஹோட்டலின் ரூம் பாய் பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இந்துமதி. 29 வயதாகும் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்தார்.

இந்நிலையில், அலுவலக வேலை காரணமாக கடந்த 22 ஆம் திகதி சென்னை வந்த இவர், ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் தங்கி இருந்தார்.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு இந்துமதி மது உட்கொண்டு போதையில் இருந்ததாக தெரிகிறது.

இதைதெரிந்துகொண்ட, ஹோட்டல் ரூம்பாய் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளார்

ரூமின் கதவு, ஜன்னல்களை மூடி விட்டு கட்டிலில் தள்ளி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியுள்ளார்.

போதையில் இருந்த போதும் இந்துமதி கூச்சலிட்டு அலற ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் தங்கியிருந்த அனைவரும், ரூம் பாயிடமிருந்து இந்துமதியை மீட்டனர்.

மேலும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தவுடன் உடனடியாக காவல்துறையினர் ரூம் பாயை கைது செய்தனர்.